வேர்களில் இத்தனை விதங்களா!
தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.வேறிடத்துப் பிறப்பவை (Adventitious - அட்வென்டிடியஸ்)தண்டு, இலை, கிளை, அடி மரம் ஆகிய பகுதிகளில் தோன்றுபவை.கரும்புமுண்டு வேர்கள் (Stilt - ஸ்டில்ட்)பிரதான தண்டில் இருந்து தோன்றி, தாவரத்தை நிலைநிறுத்த உதவுபவை.மக்காச்சோளம்தாங்கு வேர்கள் (Prop - பிராப்)கிளைகளில் உருவாகி, கீழ்நோக்கி வளரும். நிலத்தில் ஊன்றி கிளைகளைத் தாங்கும். ஆலமரம்மூச்சு வேர்கள் (Respiratory - ரெஸ்பைரேட்டரி)ஊன்று வேர்களில் இருந்து செங்குத்தாக நீர் மட்டத்திற்கு மேலும், நிலத்திலும் வளர்பவை. அலையாத்தித் தாவரங்கள்அண்டை வேர்கள் (Root Buttresses - ரூட் பட்ரெஸ்ஸஸ்)பெரு மரங்களில், பட்டையாகத் தடித்து சுவர் எழுப்பியது போல உயர்ந்து, சுற்றிலும் வளர்பவை. மருத மரம் (Buttress Tree)மிதவை வேர்கள் (Floating - ஃப்ளோட்டிங்)நீர்த் தாவரங்கள் மிதக்க உதவும். மென்மையாகவும், பருத்தும் காணப்படும். காற்று நிறைந்தவை. ஆகாயத் தாமரைஉறிஞ்சு வேர்கள் (Haustorial - ஹாஸ்டோரியல்)தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். கொடிகளுக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றை உறிஞ்சும் வேர்கள்.கஸ்குட்டா (Cuscutta)ஒட்டு வேர்கள் (Clinging - கிளிங்கிங்)மரங்களில் தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் பதிந்திருக்கும்.மிளகுக் கொடிஉறிஞ்சு கவச வேர்கள் (Velamen - வெலாமென்)செடியின் அடியிலிருந்து உண்டாகி தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும். ஆர்க்கிட் தாவரங்கள்- அ.லோகமாதேவி