எங்களுக்கு பிடித்த பாடம் இது!
ஒரு பாடமும் அந்த வகுப்பும் பிடித்துப்போவதற்கான காரணங்களில் ஆசிரியர்களின் நடவடிக்கைகளும் முக்கிய பங்கு வகிக்கும். பள்ளிப்பருவத்தில் பிடித்த பாடமே எதிர்காலத்தில் அம்மாணவனின் மேற்படிப்புகளையும் தீர்மானிக்கும். உங்களுக்குப் பிடித்த வகுப்பு (பீரியட்) என்ன? ஏன்? என கேட்டிருந்தோம். சிவகாசி, ஜேசீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களின் கருத்துகள் இதோ...ஹரிகிருஷ்ணன் 9ஆம் வகுப்புஇந்தி வகுப்பு எனக்குப் பிடிக்கும். வேடிக்கையாக இருந்தாலும், அதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம். எங்க ஆசிரியரும் இந்தியை எளிதில் புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்துவார். கீர்த்திகா 8ஆம் வகுப்புதமிழ் தான் எனக்குப் பிடித்த வகுப்பு. படிக்கப்படிக்க தமிழின் சுவையை ரசிக்கலாம். தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, மொழியில் நுட்பத்தை அறிந்துகொள்ள பெரிதும் உதவும்.ஜெஸ்சானியா மிராக்குலின் 9ஆம் வகுப்புஎனக்குக் கணித வகுப்பு மிகவும் பிடிக்கும். கஷ்டமான பாடங்களை விளையாட்டின் மூலம் சொல்லித் தருவார் எங்கள் ஆசிரியர். எத்தனை முறையும் சந்தேகம் கேட்கலாம். கோபப்படாமல் பொறுமையாகத் தீர்த்து வைப்பார். பிரித்விகுமார் 7ஆம் வகுப்புஎனக்குக் கணித வகுப்பு மிகவும் பிடிக்கும். அதுல வர்ற எந்த 'பிராப்ளம்ஸை'யும் ஸ்டெப் பை ஸ்டெப் ஆக ஆசிரியர் சொல்லிக்கொடுப்பார். எளிமையாகப் புரிஞ்சுக்கிறமாதிரி சொல்லிக் கொடுப்பாங்க என்பதால், எனக்கு கணக்கு பிடித்த பாடமாகி விட்டது.பரத்குமார் 8ஆம் வகுப்புகம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு மிகவும் பிடிக்கும். உலகமே இன்று கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. அதனால் இந்த வகுப்பு என்றாலே எல்லோருமே ஆர்வமாகக் கவனிப்போம். சாரும் எளிமையாகச் சொல்லிக்கொடுப்பாங்க. தீட்சயா 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வகுப்பு என்றால் எனக்குப் பிடிக்கும். எங்க ஆசிரியர் மிகவும் எளிமையாகப் பாடம் நடத்துவார். பாடங்களை ஞாபகம் வச்சுக்கிறதுல சிக்கல் இருக்காது. இதனால் சமூக அறிவியல் வகுப்பு என்றாலே மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பேன்.