உள்ளூர் செய்திகள்

இந்த வாரம்

ஆதிவாசி திருவிழா - ஜன.26 - பிப்.9ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் ஆண்டுதோறும் நடைபெறும் பழங்குடியினர் திருவிழா. இதில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்கின்றனர். தம் கலாசார விஷயங்களை பார்வையாளர்களுக்கு கலை, உணவு, இசை, நடனம் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். பறவைத் திருவிழா - ஜன.27 - 28ஒடிசா மாநிலத்திலுள்ள மங்கலஜோடி சதுப்புநிலம் மற்றும் நலபானா ஆகிய இடங்களில் சிலிகா பறவைத் திருவிழா மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. இவ்விழாவை, சுற்றுலாத்துறை நடத்துகிறது. புகைப்படக் கண்காட்சி, பறவைகளைப் பார்த்தல், பறவைகளைப் பற்றிய செய்திகள் என நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ரீத் 2020 - ஜன.29 - பிப்.2இராஜஸ்தானில் நடைபெறும் கலைவிழா. கைவினைப்பொருட்கள், இசை, சூஃபி நடனம், இசையோடு தியானம் என களைகட்டும் விழா இது. இராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீரில் உள்ள நச்சானா ஹவேலி, நாராயண நிவாஸ் பேலஸ் ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெறுகிறது. இந்திய கலை விழா - ஜன.30 - பிப்.22008ஆம் ஆண்டு தொடங்கி நடைபெறும் விழா. டில்லியிலுள்ள ஓக்லா தொழிற்பேட்டையிலுள்ள என்எஸ்ஐசி கண்காட்சி மைதானத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இதில் நவீன ஓவியங்கள், சிற்பங்கள், படைப்புகள் உட்பட 75 கேலரிகள் இடம்பெறுகின்றன. புத்தக வெளியீடுகளும் இங்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !