மூன்று தனுஷ் பீரங்கிகள்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று 'தனுஷ்' பீரங்கிகள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 38 கி.மீ. தொலைவுவரை குண்டுகளை வீசும் திறனுள்ள இந்த பீரங்கியை, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். தலா, 14 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த 'தனுஷ்'. மிக விரைவில் மேலும் மூன்று பீரங்கிகளும் ஓராண்டுக்குள் மேலும் 12 பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட உள்ளன.