தள தள தக தக தக்காளி
நம் அன்றாட சமையலில் காயாகவும் கனியாகவும் பயன்படும் தக்காளி, காய்கறிச் செடி இனத்தைச் சேர்ந்தது. 'டொமேட்டோ' (Tomato) என்ற ஆங்கிலச் சொல், டொமாட்ல் (Tomatl) என்ற நஃகுவாட்டில் (Nahuatl) என்ற மொழியில் இருந்து உருவானது. வைட்டமின் சி 34%வைட்டமின் எச் (பயோடின் - Biotin) 24%வைட்டமின் கே 16%தாமிரம் (காப்பர் - - Copper) 12%நார்ச்சத்து (ஃபைபர் - Fiber) 9%தக்காளிச் செடி 1 - 3 அடி உயரம் வரை வளரும்லைகோபீன் (Lycopene) தக்காளியில் மிக அதிகம் உள்ள சத்து இது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.உயிரியல் வகைப்பாடுதாயகம் : தென் அமெரிக்காதிணை : தாவரம்பிரிவு : பூக்கும் தாவரம்வகுப்பு : மக்னோலியோப்சிடா (Magnoliopsida)வரிசை : சோலானேல்ஸ் (Solanales)குடும்பம் : சோலானேசியே (Solanaceae)பேரினம் : சோலானம் (Solanum)இனம் : எஸ் லைகோபெர்சிகம் (S.Lycopersicum)அறிவியல் பெயர் : சோலானம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum)தக்காளி உற்பத்தியில்...முதல் இடம் சீனா இரண்டாம் இடம் அமெரிக்கா மூன்றாம் இடம் இந்தியா3.5 கிலோ உலகிலேயே அதிக எடையுள்ள தக்காளி அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா (Oklahoma) நகரில் 1986ல் விளைந்தது. தக்காளி தவளை: ஆமாம்! 'தக்காளி தவளை' என்ற ஒன்று இருக்கிறது. இதன் அசல் பெயர் 'டைஸ்கோபஸ் கியுநெட்டி' (Dyscophus Guineti). ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் (Madagascar) போன்ற நீர் சூழ்ந்த காட்டுப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. தக்காளி திருவிழா: 'லா டொமாட்டினா' (La Tomatina) என்ற பெயரில் தக்காளி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயினில் கொண்டாடப்படுகிறது. ஒரு வார காலம் நடக்கும் இந்தத் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை எறிந்து விளையாடுவார்கள்.