உள்ளூர் செய்திகள்

த்ரிகோணாசனம்

'த்ரி' என்றால், மூன்று என்று அர்த்தம். மூன்று கோணங்களைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருக்கும் இந்த ஆசனம்.செய்முறை:* நேராக நிமிர்ந்து கொண்டு, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். * வலது காலை அகட்டி 3 அல்லது 4 அடி அகலத்துக்கு தள்ளி வைத்துக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்தவாறே, கைகளை பக்கவாட்டில் உயர்த்தி தோள் வரை கொண்டு செல்லவும். * மூச்சை வெளிவிட்டுக்கொண்டே, மெதுவாக இடுப்பிலிருந்து வலது பக்கமாக பக்கவாட்டில் சரிந்து, வலது கை குதிகாலை தொடும்படி வைத்துக் கொள்ளவும். * இடது கை தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு இருக்கட்டும். * மேல் கையை பார்த்துக் கொண்டு 10 முறை மூச்சை உள்ளிழுத்து விடவும். * பிறகு மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே நிமிர்ந்து வரவும். * மூச்சை வெளிவிட்டபடியே கைகளை கீழே இறக்கி, வலது காலை திரும்ப கொண்டு வந்து இரண்டு கால்களை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.* சிறிது ஓய்வெடுத்துவிட்டு, இடது காலை அகட்டி இடது பக்கத்தில் செய்யவும்.பலன்கள் :* மார்பு இழுக்கப்பட்டு நுரையீரல்கள் விரிவடைவதால், மூச்சுப் பிரச்னைகள் வருவது தடுக்கப்படுகிறது. * மேல் கையை பார்த்துக் கொண்டு நிற்கும்போது, கண்களில் மாற்றங்கள் நிகழ்வதால் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.* கண்பார்வையை ஒரே இடத்தில் பதியச்செய்து இருப்பதால், கவனம் அதிகரித்து பாடங்களை நன்கு மனதில் இருத்திக் கொள்ள உதவும். * கால்கள் இரண்டு கைகள் இரண்டு நன்கு இழுக்கப்படுவதால், நல்ல வளர்ச்சி இருக்கும்.- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !