விராட் கோலி 31
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, 31வது பிறந்த தினதை பூடானில் மனைவியுடன் கொண்டாடினார். கடந்த நவ.5 ஆம் தேதி விராட் கோலியின் பிறந்த நாள். இதையொட்டி கிரிக்கெட் உலக நண்பர்கள், ஊடகங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதில் தனக்குத்தானே எழுதிக்கொண்ட வரிகளை ட்விட்டரில் வெளியிட்டார். ”உன் வழியில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள். இதில் தவறினால் தோல்விதான் கிடைக்கும். பலர் உன்னை வெறுத்தாலும், நேசித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதே! உன் மீது நீ நம்பிக்கை வை” என எழுதியிருந்த வாசகங்கள் அனைவரையும் கவர்ந்தன.