உள்ளூர் செய்திகள்

தண்ணீர் சேகரிப்பை பள்ளியில் தொடங்கலாம்!

தண்ணீர், இயற்கையின் அனைத்து உயிர்களுக்கு உந்துசக்தி. தண்ணீர் இல்லாமல் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. இப்போது தண்ணீர் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது. பள்ளிகளில் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சில எளிய முறைகள் இதோ:* கை கழுவும் இடத்தில், 'குழாயை சரியாக மூடவும்' என்ற போஸ்ட்ரை ஒட்டுங்கள்.* பள்ளியில் ஏதாவது குழாயிலிருந்து தண்ணீர் சொட்டினால், உடனடியாக ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். * கழிவறையில் தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காதீர்கள். சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.* பள்ளி வளாகத்தில் வறட்சியைத் தாங்கும் மரக்கன்றுகளை நடுங்கள்.* தண்ணீர் சேமிப்பு குறித்து, உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள்.* தண்ணீர் சேமிப்பு பற்றி, போட்டிகள் நடத்தி, பல மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். * தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் புதிய கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. கடுமையான தட்டுப்பாடு காலத்தில் பள்ளி வளாகத்தில் இவற்றைப் பொருத்தலாம்.* தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, அதில் குடிநீரை நிரப்புங்கள். தேவையில்லாமல் தண்ணீர் பாட்டில் வாங்குவதைத் தவிருங்கள். * குடிநீர் மீதமானால், அதை கீழே கொட்டாமல், மரம், செடிகள் இருக்கும் இடங்களில் கொட்டுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !