உள்ளூர் செய்திகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்!

கடந்த ஆண்டு பருவ மழை குறைந்துபோனதால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே தண்ணீர் தேவை அதிகரித்தது. இவற்றைக் கருத்தில்கொண்டு, தண்ணீர் சிக்கனம்: உங்கள் ஆலோசனை என்ன என்று கேட்டிருந்தோம். இக்கேள்வியுடன் சென்னை, பெரம்பூர், கே.ஆர்.எம். பப்ளிக் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம். ஐஸ்வர்யா (8ஆம் வகுப்பு)தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, எல்லா இடங்களிலும் எழுதிப்போடவேண்டும். நிலத்தடி நீரை உயர்த்த, நீர்நிலைகளை ஒழுங்காகத் தூர்வார வேண்டும். மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டவேண்டும். சங்கீதா (9ஆம் வகுப்பு)வீட்டில் குளிக்க, துவைக்கப் பயன்படுத்திய தண்ணீரை வீணாக்கக் கூடாது.அந்த நீரை வீட்டிலேயே தொட்டி கட்டி, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.ஷெரீன் பானு (9ஆம் வகுப்பு)சொம்பு, டம்ளர் ஆகியவற்றில் தண்ணீர் பிடித்துவைத்து பல்துலக்க வேண்டும். கார், டூவீலரை வாட்டர் வாஷுக்கு கொடுக்காமல், நாமே, அரை பக்கெட் தண்ணீரில் ஈரத்துணி கொண்டு துடைக்கலாம்.வர்ஷினி (9ஆம் வகுப்பு)வாட்டர் டேங்க் நிரம்பியவுடன் மோட்டார் தானே ஆப் ஆகும்படி கருவிகள் விற்கின்றன. அதைப் பயன்படுத்த வேண்டும். வீட்டுத்தோட்டத்திற்கு பக்கெட்டில் நீர் ஊற்றாமல் பூ வாளியைப் பயன்படுத்தலாமே!தனுஸ்ரீ (8ஆம் வகுப்பு)சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். பல வீடுகளில் குழாய்களைச் சரிவர மூட முடியாது. சொட்டுச் சொட்டாக நீர் வீணாவதைத் தடுக்க, உடனடியாக அவற்றைச் சரிசெய்ய வேண்டும். மகாலக்ஷ்மி (9ஆம் வகுப்பு)பாத் டப், ஷவர் போன்றவற்றுக்கு மாற்றாக வாளியில் தண்ணீர் பிடித்துக் குளிக்கலாம். தண்ணீரும் சிக்கனமாகச் செலவழியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !