சூழலில் நடப்பது என்ன?
சூழலியல் (Ecology - ஈகாலஜி) என்ற சொல்லை நாம் அடிக்கடி படிக்கிறோம். உயிரினங்கள், இயற்கைச் சூழல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப்பற்றிய அறிவியல்தான் சூழலியல்.* சூரிய வெப்ப ஆற்றல் சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.* சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி உயிரற்ற பொருட்கள் பல்வேறு சக்திகளை வெளிப்படுத்துகின்றன.* தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு சூரிய வெப்பம் உதவுகிறது.* தாவர உண்ணிகள் - தாவரங்களை உண்ணும் உயிரினங்கள் முதல்நிலை நுகர்வோர்.* ஊன் உண்ணிகள் - தாவரங்களை உண்ணும் உயிரினங்களை உண்பவை இரண்டாம்நிலை நுகர்வோர்.* இறந்த தாவரங்கள், உயிரினங்களை மட்கச்செய்து, சிதைமாற்றம் செய்பவை மூன்றாம்நிலை நுகர்வோர்.* உயிருள்ளவை அனைத்தும் உயிரற்றவைகளைச் சார்ந்து இயங்குபவை. இயற்கை என்பது இவை இரண்டையும் உள்ளடக்கியது. இதுவே சூழலியலின் முக்கிய அம்சம். எனவே, சூழலியலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.- ப.கோபாலகிருஷ்ணன்