இழந்தது பார்வையைத்தான்; நம்பிக்கையை அல்ல
குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்தவர் பிராச்சி சுக்வானி (21 வயது). மக்குலார் தேய்வு என்ற அரிய வகை கண் கோளாறால் பாதிக்கப்பட்ட இவருக்கு, 3ம் வகுப்பு படிக்கும்போதே, 80 சதவீத பார்வைத் திறன் பறிபோனது. எனினும், பி.பி.ஏ., வரை படித்து பட்டம் பெற்ற சுக்வானி, தற்போது, அகில இந்திய நுழைவுத் தேர்வான 'கேட்'(Common Admission Test - CAT) தேர்வில் 98.55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.,மில் (IIM) படிப்பதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. 'படிப்பை முடித்துவிட்டு, பார்வையற்றவர்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் தொடங்குவதே எனது லட்சியம்' என்று சுக்வானி தெரிவித்துள்ளார். பிராச்சி சுக்வானியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி உத்வேகத்தை அளிப்பதாக அவருடைய பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.