மனம் குவியும் இசை: பதில் என்ன?
1. 17ஆம் நூற்றாண்டில் அமெரிக்க சுதந்திர தாகத்தை எழுப்ப வட அமெரிக்க கண்டத்தில் ஒலித்த புரட்சிப் பாடலின் பெயர்?2. அமெரிக்காவில் எலெக்ட்ரிக் கிதார் மூலம் அரசியல் புரட்சிப் பாடல்களை இசைத்துப் புகழ்பெற்ற கிதாரிஸ்ட்?3. இந்தியத் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடல் குஜராத்தில் எத்தனை பேரால் ஒரே நேரத்தில் பாடப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது?4. உலகின் மிகச்சிறிய தேசிய கீதம் எனப் பெயர் பெற்ற ஜப்பானின் தேசிய கீதம் 'கிமிகாயோ'-வைப் பாடிமுடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?5. இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட புகழ்பெற்ற போஜ்பூரி பாடகர் யார்?விடைகள்:1. டையிங் ரெட்கோட் (Dying Redcoat)2. ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ்3. 5 லட்சம் 4. 45 விநாடிகள்5. மனோஜ் திவாரி