தவறு எது? பிழை எது?
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சொல் காலப்போக்கில் அதன் வடிவம், பொருள் ஆகியவற்றில் மாற்றம் அடைவதுண்டு. இந்த மாற்றங்களைக் கண்டறிவது சொற்பிறப்பு வரலாறு (etymology) எனப்படும். மொழிப்பயன்பாட்டில் இத்தகைய மாற்றங்கள், பொருள் குழப்பத்தை உருவாக்குமானால், அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.தமிழ்மொழியின் பயன்பாட்டில் பெரும்பாலானோர், தவறு, பிழை என்ற இரு சொற்களையும் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருவனவல்ல. இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டு.தவறு என்பது தன்னை அறியாமல் நிகழ்வது, எதிர்பாராமல் நடைபெறுவது. கை தவறுதலாக ஒரு பொருளை கீழே போட்டு விடுவது.பிழை என்பது அறிந்து அல்லது வலிந்து செய்வது. வினாவிற்கு விடைதெரியாத நிலையில் தெரிந்தே பொருத்தமில்லாத விடையை எழுதுவது பிழை. பேச்சு வழக்கில் இது பிசகு எனவும் குறிப்பிடப்படுகிறது.தவறு என்ற சொல் அனைத்து திராவிட மொழிகளிலும் காணப்படுகிறது. ஆனால், பிழை என்ற சொல் தென் திராவிட மொழிகளில் மட்டுமே காணப்படுகிறது.- பேராசிரியர் ஏ. ஆதித்தன்