உள்ளூர் செய்திகள்

நான் யார்?

'இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்'. இந்த வாக்கியத்தைச் சொன்னது நான்தான். ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவனான நான், பாஸ்டன் நகரில் 1706, ஜனவரி 17ல் பிறந்தேன். மொத்தம் 17 பிள்ளைகளில் நான் 10ஆவது பிள்ளை. என் அப்பா சோப்பு, மெழுகுவர்த்தி தயாரித்து விற்பவர். ஏழ்மையின் காரணமாக நான் பள்ளி செல்லவில்லை. இருந்தாலும் என் ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினேன். தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே, பல மொழிகள் கற்றேன். 'பென்சில்வேனியா கெசட்' (Pennsylvania Gazette) என்ற இதழை 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி, அதன் பொறுப்பை ஏற்று நடத்தினேன். பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நான் நிறுவியதுதான். குறைவான எரிபொருளில் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பைக் கண்டுபிடித்தேன். மின்னலில் மின்சக்தி இருக்கிறது என்பதைக் கண்டறிந்து இடிதாங்கியைக் கண்டுபிடித்தேன். தூரப் பார்வைக்கும் கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் கண்ணாடியை (Bifocal lens) கண்டுபிடித்தேன். கண்டுபிடிப்புகள் எதற்கும் நான் காப்புரிமை வாங்கவில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது, நமது கண்டுபிடிப்புகளால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே என் எண்ணம்.விடை: பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (Benjamin Franklin)பிறப்பு: ஜனவரி 17, 1706 மறைவு: ஏப்ரல் 17, 1790


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !