உள்ளூர் செய்திகள்

ஆபத்துக்கால வார்த்தை

'பறந்து கொண்டிருந்த விமானம் மாயமானது. தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கடலில் விழுந்திருக்கலாம்...' இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி படிக்கிறோம். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது பெரிய ஆபத்து ஏற்பட்டால் விமானிகள், தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) தகவல் அனுப்புவார்கள். 'தாங்கள் ஆபத்தில் இருக்கிறோம்' என்பதைச் சுருக்கமாக, உடனடியாகத் தெரிவிக்க விமானிகள் 'மேடே' (Mayday) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். லண்டன் விமான நிலையத்தில் பணியாற்றிய விமானி 'ஃப்ரெடரிக் ஸ்டான்லி மாக்ஃபோர்ட்' (Frederick Stanley Mockford) என்பவர் 1923-ல் 'மேடே' (Mayday) என்ற வார்த்தையைப் பரிந்துரை செய்தார். அந்தக் காலத்தில் லண்டனுக்கும் பாரீசுக்கும் இடையில் அதிக விமானங்கள் பறந்தன. விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் ஃபிரெஞ்ச் (French) மொழி பேசும் விமானிகளுடன் அதிகம் உரையாட வேண்டியிருந்தது. இதையெல்லாம் யோசித்த அந்த அதிகாரி, 'ஹெல்ப் மீ' (Help Me) என்று பொருள் தரக்கூடிய 'மெய்டர்' (maider) என்ற பிரெஞ்ச் வார்த்தையின் சாயலில் 'Mayday' வார்த்தையை பரிந்துரைத்தார். அப்படி உருவானது தான் இந்த 'Mayday'. விமானங்கள் மட்டுமல்ல, கப்பல்களிலும் ஆபத்துக் காலத்தில் இதே வார்த்தைதான் உபயோகப்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !