வாக்கியத்தில் சொல் ஒழுங்கு
'நான் அம்மாவுடன் நேற்று பூங்காவுக்குச் சென்றேன்.'இது ஒரு வாக்கியம். இதை எத்தனை விதமாக மாற்றி அமைக்க முடியும் என்று பார்க்கலாமா?நேற்று நான் அம்மாவுடன் பூங்காவுக்குச் சென்றேன்நான் நேற்று அம்மாவுடன் பூங்காவுக்குச் சென்றேன்நான் அம்மாவுடன் நேற்று பூங்காவுக்குச் சென்றேன்நான் அம்மாவுடன் பூங்காவுக்கு நேற்று சென்றேன்அம்மாவுடன் நேற்று நான் பூங்காவுக்குச் சென்றேன்பூங்காவுக்கு அம்மாவுடன் நான் நேற்று சென்றேன்நான் பூங்காவுக்கு அம்மாவுடன் நேற்று சென்றேன்நேற்று நான் பூங்காவுக்கு அம்மாவுடன் சென்றேன்இப்படி எத்தனை விதமாக அமைத்தாலும், சென்றேன் என்கிற சொல் வாக்கியத்தின் கடைசியில் வருகிறது.சென்றேன் என்கிற சொல், 'வினைமுற்று' ஆகும். அதாவது முற்றுப்பெற்ற ஒரு செயல். பொதுவாக வினைமுற்று, வாக்கியத்தின் கடைசியில் இருக்கும்.வினைமுற்றுக்கு, மேலும் சில எடுத்துக்காட்டு சொற்கள் : சென்றேன், வந்தேன், பார்த்தேன்.வினைமுற்று வாக்கியத்திலுள்ள ஏனைய தனிச் சொற்கள், தன்னியல்பில் முன்பின்னாக அமையும்.ஒரு தனி வாக்கியம், ஒரு வினைமுற்றையும், ஒன்று அல்லது பல தனிச் சொற்களையோ, பெயர்த் தொடர்களையோ கொண்டிருக்கும்.மேலே உள்ள வாக்கியம், பல தனிச்சொற்களையும், ஒரு வினைமுற்றையும் கொண்டு அமைந்தது.ஒரு தொடரில், ஒன்றுக்கு அதிகமான சொற்கள் இருந்து, அவை முழுவதுமே இடம்மாறுவதைப் பின்வரும் வாக்கியத்தின்மூலம் அறியலாம்.நான் 'இந்தப் பெரிய புத்தகத்தை' முன்பே படித்திருக்கிறேன்.இந்த வாக்கியத்தில் 'இந்தப் பெரிய புத்தகத்தை' என்பது ஒரு பெயர் சொற்றொடர். இந்த வாக்கியத்தை மாற்றி எழுதினாலும், இத்தொடர் முழுமையாகவே இடம் மாறுகிறது.முன்பே நான் 'இந்தப் பெரிய புத்தகத்தைப்' படித்திருக்கிறேன்.'இந்தப் பெரிய புத்தகத்தை' நான் முன்பே படித்திருக்கிறேன்.முன்பே 'இந்தப் பெரிய புத்தகத்தை' நான் படித்திருக்கிறேன்.இவ்வாறு வேறுவிதமாகவும் வாக்கியத்தை அமைக்கலாம்.அன்றி, 'இந்த முன்பே பெரிய புத்தகத்தை' என்றோ, 'இந்த நான் பெரிய புத்தகத்தை' என்றோ அமைவதில்லை. இரண்டு முறைகளிலும் வினைமுற்று வாக்கியத்தின் பின்பகுதியில் வருவதையும் கவனத்தில் கொள்ளலாம்.ஒரு தனி வாக்கியம், ஒரு வினைமுற்றையும், ஒன்று அல்லது பல தனிச் சொற்களையோ, பெயர்த் தொடர்களையோ கொண்டிருக்கும். எழுவாய் பயனிலைக்கு நடுவில் செயப்படுபொருள் அமையும். 'நான் சென்றேன்' என்பது எழுவாய்த் தொடர். 'சென்றேன் நான்' என்பது வினைமுற்றுத் தொடர். வினைமுற்றை கடைசியாக அமைத்து அதன் முன்னுள்ள பெயர்ச்சொற்களை எப்படியும் மாற்றி அமைக்கலாம். பெரும்பாலும் பொருள் மாற்றம் வராது. இரண்டாவது எடுத்துக்காட்டை இப்படி அமைக்கவும். முன்பே நான் திருக்குறளைப் படித்திருக்கிறேன். திருக்குறளை நான் முன்பே படித்திருக்கிறேன்.முன்பே திருக்குறளை நான் படித்திருக்கிறேன். இவ்வாறு வினைமுற்றை வாக்கியத்தின் கடைசியில் அமைத்து, பிற சொற்களை முன்பின்னாக மாற்றி அமைப்பினும் பொருள் மாறுபடாது. - ஆர்.சி. மதிராஜ்