உள்ளூர் செய்திகள்

உலகப் பாடல் உங்களுக்காக

உங்கள் வீட்டில், தம்பியோ தங்கையோ இருக்கிறார்களா? அவர்களுக்கு நீங்கள் தானே மாஸ்டர்? என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள்?கவலை வேண்டாம். இதோ ஒரு ஆங்கிலப் பாடல். முதலில் நீங்கள் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். மனப்பாடம் செய்வது கஷ்டம் இல்லை என்பதை, பாடலைப் படித்ததுமே புரிந்துவிடும். ஈசியான பாடல்.அதை ஜூனியரோடு விளையாடிக்கொண்டே சொல்லுங்கள்; நீங்கள் சொல்லச் சொல்ல, ஜூனியர் அதைத் திரும்பச் சொல்ல வேண்டும். இதோ பாடல்…Monday morning is market day,I go to the market forOne fish, for two fish,And bring them back home to eat.Monday morning is market day,I go to the market forThree eggs, for four eggs,And bring them back home to eat.Monday morning is market day,I go to the market forFive plums, for six plums,And bring them back home to eat.Monday morning is market day,I go to the market forSeven cakes, for eight cakes,And bring them back home to eat.Monday morning is market day,I go to the market forNine pies, for ten pies,And bring them back home to eat.Monday morning was market day,I went to the market toBuy food, but ate it,Now I've got a tummy ache.இங்கிலீஷில் மட்டும் இருந்தால் போதாதே, தமிழும் வேண்டுமே… அதற்கு, கீழே உள்ள பாடலைப் படித்துக் கொள்ளுங்கள். இதுவும் மனப்பாடம் செய்ய ஈசிதான். இது, மேலே உள்ள பாடலின் மொழிபெயர்ப்பு இல்லை, அதே ஐடியாவில் எழுதப்பட்ட பாடல். இங்கிலீஷ் பாடலில் எண்களை (Numbers) மட்டும் ஜூனியருக்குச் சொல்லித் தரலாம். இந்தத் தமிழ்ப் பாடலில், எண்களோடு, கிழமைகளும் அறிமுகம் ஆகும். திங்கள் கிழமை சந்தையாம்மீன்கள் வாங்கப் போவேனாம்ஒரு மீன் இரண்டு மீன் வாங்குவேனாம்வீட்டுக்குக் கொண்டு வருவேனாம்செவ்வாய்க் கிழமை சந்தையாம்முட்டை வாங்கப் போவேனாம்மூன்று முட்டை நான்கு முட்டை வாங்குவேனாம்வீட்டுக்குக் கொண்டு வருவேனாம்புதன் கிழமை சந்தையாம்பழங்கள் வாங்கப் போவேனாம்ஐந்து பழம் ஆறு பழம் வாங்குவேனாம்வீட்டுக்குக் கொண்டு வருவேனாம்வியாழக் கிழமை சந்தையாம்கேக்குகள் வாங்கப் போவேனாம்ஏழு கேக் எட்டு கேக் வாங்குவேனாம்வீட்டுக்குக் கொண்டு வருவேனாம்வெள்ளிக் கிழமை சந்தையாம்சாக்லேட் வாங்கப் போவேனாம்ஒன்பது சாக்லேட் பத்து சாக்லேட் வாங்குவேனாம் வீட்டுக்குக் கொண்டு வருவேனாம்சனிக்கிழமை என்ன செய்வேனாம்?ஞாயிற்றுக்கிழமை என்ன செய்வேனாம்?இரண்டு நாட்களும் விடுமுறையாம்வீட்டில் ஓய்வாய் இருப்பேனாம்…


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !