உள்ளூர் செய்திகள்

ஏமன்: தொடரும் குழந்தைகளின் இறப்பு

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளில் சுமார் 85 ஆயிரம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளதாக, ஒரு முன்னணி தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. அங்கே தொடரும் உள்நாட்டுப் போர், மிக மோசமான மனிதாபிமானச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. சென்ற மாதத்தில் ஐ.நா. சபை, 1.4 கோடி ஏமன் மக்கள் பஞ்சத்தில் சிக்கியிருக்கலாம் என்று எச்சரித்தது. இப்போரினால் இதுவரை, குறைந்தது 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.மோசமான இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை முயற்சி செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !