இப்படியும் சேமிக்கலாம்!
தண்ணீர் சிக்கனம் என்பதும் சேமிப்புதான். அதில் பல கருவிகளும் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இருக்கும் கருவிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.அப்படிப்பட்ட இரண்டு முன்னேற்றங்களைப் பார்ப்போமா?வாடையற்ற, தண்ணீரற்ற சிறுநீர் கழிப்பிடம்சிறுநீர் கழித்துவிட்டு, தண்ணீரைத் திறந்துவிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். அப்போதுதான், சிறுநீரின் வாடை போகும் என்று நினைக்கிறோம். உண்மையில், தண்ணீர் சேருவதால் தான், சிறுநீருக்கே கெட்ட வாடை வருகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.வாடையில்லாமல், அதே சமயம் தண்ணீரும் இல்லாமல் சிறுநீர் கழிப்பிடத்தை உருவாக்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, சிறுநீர் தொட்டியின் கீழ்ப்பாகத்தில் ஓர் இணைப்பை உருவாக்கி, அதில் சில வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது ஒருமுறை. இன்னொரு முறை, தண்ணீர் கொட்டுவதற்குப் பதில், ஒரு திரவத்தைக் கசிய விடுகிறார்கள். இதுவே, சிறுநீர் தொட்டியைச் சுத்தம் செய்துவிடுகிறது. ஒவ்வொருமுறையும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீரை நீங்கள் சேமிக்கிறீர்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.தண்ணீர் பூத்தூவல்குழாயைத் திறந்தால், தண்ணீர் 'சர்'ரென்று கொட்டும். பல சமயங்களில் அத்தனை தண்ணீரையும் வீணாக்கிவிடும். அதாவது, கை கழுவ, பல்துலக்க என்றெல்லாம் பயன்படும் தண்ணீர் இவ்வளவு வேகமாகக் கொட்ட வேண்டியதில்லை. ஒவ்வொருமுறையும் 300 மி.லி. தண்ணீர் வீணாகிறது. அதனால், குழாயின் முனையில் ஒரு சின்ன கருவி பொருத்தப்படுகிறது. இது தண்ணீரை அழுத்தத்தின் மூலமாக வேகப்படுத்தி, அதேசமயம் பூத்தூவல் மாதிரி கொட்ட வைக்கிறது. இதனால், 95 சதவீத தண்ணீர் பயன்பாடு குறைகிறது.