உள்ளூர் செய்திகள்

புன்சிரிப்புடன் இனி புத்தகம் வாசிக்கலாம்

புத்தகம் வாசிக்கும்போது நமக்குத் தேவைப்படும் முக்கியமான ஒரு பொருள் புக்மார்க். அதை நாமே செய்து பயன்படுத்தப் போகிறோம்.தேவையான பொருட்கள்: மஞ்சள் நிறத் தாள் 15 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம், கத்தரிக்கோல், பசை, மார்க்கர், பென்சில், காம்பஸ்.சதுரத்தின் ஒரு மூலைவிட்டத்தில் இரண்டாக மடித்து ஒரு முக்கோண வடிவம் செய்ய வேண்டும்.முக்கோணத்தின் அடிப்பகுதி முனைகளை மேல் முனையோடு பொருந்தும் வகையில் மடிக்க வேண்டும். மடிப்பு கிடைத்த பிறகு, மீண்டும் முனைகளை முன்பு இருந்தபடியே விரிக்க வேண்டும். ​ முக்கோணத்தின் நடுவில் ஒரு சாய் சதுர வடிவம் கிடைத்து இருக்கும். அதன் மேல்புறத் தாளின் ஒரு முனையை, கீழ்நோக்கி முக்கோண வடிவில் மடிக்க வேண்டும்.முன்பு மேல்நோக்கி மடித்த பகுதிகளில் பசை தடவி, முனைகளை விளிம்பிற்குள் செருக வேண்டும்.சதுர மடிப்புக்குள் காம்பஸ் வைத்து ஒரு வட்டத்தை வரைய வேண்டும். வட்டத்தின் விளிம்புகள் முழுமையாக இருக்கத் தேவையில்லை. விளிம்புக்கு வெளியே இருக்கும் பகுதிகளைக் கத்தரித்துவிடவும். கருப்பு மார்க்கர் கொண்டு வட்டத்தின் விளிம்பை அடர்த்தியாக வரைந்தால், ஒழுங்கற்று இருக்கும் விளிம்பை மறைத்துவிடலாம்.கண் இமைகளையும், சிரிக்கும் வாயையும் வரைந்துவிட்டால் ஸ்மைலி புக்மார்க் ரெடி!இனி புத்தகம் வாசிக்கும்போது, புத்தகத்தோடு நீங்கள் கைப்பட செய்த ஸ்மைலி புக்மார்க்கும் உங்களை மகிழ்விக்கும்.-ஓவியா டீச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !