உள்ளூர் செய்திகள்

நாற்காலி இல்லை; ஆனாலும் உட்காரலாம்

நூனி என்ற ஜெர்மானிய நிறுவனம், சபேட்டி (Sapetti) என்ற ஸ்விஸ் நிறுவனத்தின் உதவியோடு, நாம் உடலில் அணிந்துகொள்ளும் வகையான இலகுவான இருக்கைகளைத் தயாரித்துள்ளது. இது நமது இரு கால்களிலும், இடுப்பிலும் அணிந்துகொள்ளும் ஒரு பெல்ட் போன்ற உபகரணம் மட்டுமே!பாலிமைட் என்ற இலகுரக ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டகத்தின் பட்டைகளை நமது கால்களில் இணைத்துக் கொள்ள முடியும். நடக்கும்போது எவ்வித சிரமமும் இருக்காது. அதேசமயம், உட்கார நினைக்கையில் நாற்காலியைத் தேடிப்போக வேண்டியதில்லை. நின்ற வாக்கிலேயே அப்படியே உட்கார்ந்தால் போதும். இந்தச் சட்டகம், நாற்காலியாக மாறி, நமது எடையைத் தாங்கிக்கொள்ளும். இந்த நவீன ஆசனம், அதிக நேரம் நின்றபடியே வேலை செய்ய வேண்டிய தொழிற்சாலைகளில், மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !