ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்றுவரும் 126 வது மலர் கண்காட்சியை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
கடந்த மே 10 ஆம் தேதி துவங்கிய கண்காட்சி வருகின்ற 20 ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நீலகிரி மலை ரயிலின் நீராவி இன்ஜின் உருவம்,டிஸ்னி வோர்ல்டு ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.டிஸ்னி வேர்ல்டின் கதாபாத்திர உருவங்களான, 'மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூபி, புளூட்டோ, டொனால்ட் டக்,' ஆகியவை ஒரு லட்சம் கார்னேசன், கிரைசாந்திமம், ரோஜா, மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அலங்கார வளைவுகள், ரங்கோலி, வனவிலங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மலர் காண்காட்சி தொடங்கும் நிறைவடையும் நாளான்று லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முயல்,தேனீ,பட்டாம்பூச்சி,யானை,காட்டெருமை,மான்,பாண்டா கரடி உள்ளீட்டவை மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
படங்கள்:ரகு.