உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / இயற்கையின் ரசிகை மலர்விழி ரமேஷ்...

இயற்கையின் ரசிகை மலர்விழி ரமேஷ்...

இயற்கையின் ரசிகை மலர்விழி ரமேஷ்...மலர்விழி ரமேஷ்.. தஞ்சாவூர்காரர்,இந்த மண்ணின் மகள் என்பதில் நிரம்பவே பெருமை உண்டு .. எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.திருமணமாகி இருபத்தைந்து வருடங்களாகிறது கணவர் குழந்தைகள் என பாசமான உலகத்திற்கு சொந்தக்காரர்.இயற்கையை வெகுவாக ரசிக்கும் குணாதியசம் கொண்டவர்.விடியலில் வானம் நிகழ்த்தும் வர்ண ஜாலங்கள் , பறவைகளின் இனிய கானங்கள் ,அந்தியில் மிரட்டும் வண்ணத்தில் கதிரவனின் அஸ்தமன காட்சி, சாரல் மழை, மலைத்தொடர், பனித்துளி, மின்னல் கீற்று,பேரிரைச்சலோடு கொட்டும் அருவி,, என்று ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு முறை பார்க்கையிலும் ஓர் அழகு ஒளிந்திருப்பதாய் இவருக்கு தோணுவது உண்டு.கண்களால் கைது செய்து மனதினுள் வைத்து ரசித்ததை கேமிராவினுள் பிடிக்க ஆரம்பித்தது சில வருடங்களாய்தான். பார்ப்பவற்றையும் , ரசிப்பவற்றையும் படம் பிடிக்கவேண்டும் என்ற என் ஆர்வம் கண்டு கணவர் அன்பாய் வாங்கி தந்த கேமிரா இப்பொழுது என்னுள் ஒரு அங்கமாகி போனது. 'விழியின் விழியில் ' என்ற பெயரில் வலைப்பக்கம் ஆரம்பித்து அதில் படங்களை பகிர்ந்து வருகிறேன்.எத்தனை முறை படம் பிடித்தாலும் அலுத்து போகாத ஓர் இடம் தஞ்சை பெரிய கோயில்...பல முறை பல கோணங்களில் எடுத்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் புது அழகு தெரிவது போல் எனக்கு தோன்றுவது உண்டு.அதே போல் அதிகாலை சூரியன் .தினம் தினம் படம் பிடித்தாலும் அதில் ஒரு சிறு மாற்றத்தோடு அதி அற்புதம் காட்டும் கதிரவனின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை எனலாம்.. . வீட்டு தோட்டத்துக்கு விருந்தாளி போல் வந்து ஒரு பொந்திலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி என்னிடம் நலம் விசாரித்த நாகராஜனை பெரும் நடுக்கத்தோடு படம் பிடித்து அதை முகபுத்தகத்தில் உள்ள ஒரு குழுவில் போட்டிக்கு அனுப்பி முதல் பரிசை தட்டி சென்றதும் , அதே குழுவில் நடந்த இன்னொரு போட்டியிலும் பரிசு வாங்கியது மறக்க முடியாத மகிழ்வான தருணம்.நான் முக்கியம் இல்லை புகைப்படங்கள் எடுப்பதும் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் மனதிற்கு இனிமைதரும் விஷயம் என்ற செய்திதான் முக்கியம் என்று கூறி தான் படங்களை நமது பொக்கிஷம் பகுதிக்கு தந்திட்ட மலர்விழி ரமேஷ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை