UPDATED : ஏப் 14, 2016 08:03 AM | ADDED : ஏப் 13, 2016 12:53 PM
கோவை
லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர்
மறைந்த டி.ஜெயவர்த்னவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும்
டிஜே நினைவு புகைப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.போட்டிக்கு
நுழைவு கட்டணம் கிடையாது, எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம், யார்
வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், படங்கள் இந்தியாவில் எடுத்ததாக
இருக்கவேண்டும், அனுப்பும் படத்திற்கு அவசியம் தலைப்பு கொடுக்கப்பட
வேண்டும், படங்களை ஆன்லைனில் தான் அனுப்பவேண்டும், இயற்கை என்ற தலைப்பின் கீழ்
படங்கள் அமைந்திருக்கவேண்டும் என்பது உள்ளீட்ட பல விதிகள் உண்டு. இந்த
விதிகளை தெரிந்து கொள்ளவும், படத்தை எங்கு எப்படி அனுப்பவேண்டும் என்பதை
தெரிந்து கொள்ளவும் www.djmpc.in என்ற வலைத்தளத்திற்கு சென்று முழுமையாகத்
தெரிந்து கொள்ளவும்.படங்கள் வருகின்ற ஜூன் மாதம்
30ந்தேதிக்குள் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் படங்களுக்கு முதல்
பரிசு 3 லட்சமும், இரண்டாவது பரிசு 2.25 லட்சமும், மூன்றாவது பரிசு 1.5
லட்சமும், மற்றும் ஐந்து பேருக்கு ஆறுதல் பரிசாக பத்தாயிரமும் என மொத்தம்
ஏழேகால் லட்ச ரூபாய் பரிசாக பணம் வழங்கப்படுகிறது.இந்தியாவில்
நடைபெறும் புகைப்பட போட்டிகளிலேயே பரிசுகளை அதிகப்படியாக தரும் போட்டி
இதுதான் ஆகவே நீங்கள் உங்கள் சிறந்த புகைப்படத்தை அனுப்புவதன் மூலம்
பரிசும், பாராட்டும் பெற வாழ்த்துகள்.-எல்.முருகராஜ்dinamalar.in