உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பறவைகள் சரணாலயமாக மாறிவரும் திருவொற்றியூர்.

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் திருவொற்றியூர்.

வடசென்னை திருவொற்றியூரில் உள்ளது மாட்டுச்சந்தை மேம்பாலம்.இந்த மேம்பாலத்தின் இறக்கத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான ஒரு குட்டை உள்ளது. எப்போதும் தண்ணீர் தேங்கியிருக்கும் இந்த குட்டையில் ஜிலேபி கெண்டை உள்ளீட்ட பல்வேறு வகை மீன்கள் நிறைந்திருக்கிறது.இந்த மீன்களை உணவாக்கிக் கொள்ள இங்கு பெலிகான் என்று சொல்லக்கூடிய கூழைக்கடா,செங்கால் நாரை,பர்பிள் மூர்கான் உள்ளீட்ட பல்வேறு வகை பறவைகள் முகாமிட்டுள்ளன. மனிதர்கள் அதிகம் நடமாட்டமில்லாத பகுதி என்பதால் தொந்திரவின்றி இந்த இடத்தில் பறவைகள் சுதந்திரமாக இருந்துவருகின்றது.பர்பிள் மூர்ஹென் என்ற பறவை சதுப்பு நிலங்கள்,நாணல்கள் மற்றும் புல்வெளிகளுக்கு இடையே காணப்படும்.நாட்டுக்கோழி அளவுள்ள இந்தப் பறவைக்கு, பளபளப்பான ஊதா நிறத்தில் வழுக்கைத் தலையும்,சிகப்புத் திட்டும், நீண்ட சிவப்புக் கால்களுடனும் காணப்படுகிறது. கூழைக்கடா பறவையை மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர். பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை இதுதான்.இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும்.கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. நாரை குடும்பத்தைச் சேர்ந்த செங்கால் நாரை செந்நிற கால்களும் செந்நிற அலகும் கொண்ட அழகிய பறவையாகும்.இது தவிர இன்னும் பல பறவைகள் இங்குள்ளன,பறவை ஆர்வலர்கள் இங்கு இப்போது சென்றால் இவைகளைக் கண்டு களிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை