துபாயில் தமிழர்களுக்கு கோல்டன் விசா
துபாய்: துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் சார்பில் அமீரக அரசின் சார்பில் சமூகம் மற்றும் ஊடகப்பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட முதுவை ஹிதாயத், தொழில் முதலீட்டுக்காக ராஜீவ்காந்தி ஆகியோருக்கு பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் தலைமை வகித்தார். அமீரகப் பிரமுகர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி கோல்டன் விசாக்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் பி.எம். குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் கனகராஜா, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன், எம்.ஏ.கே. கர்டைன் நிறுவனத்தின் முகைதீன் அப்துல் காதர், ஓய்வு பெற்ற பள்ளிக்கூட முதல் லியாக்கத் அலி, இலங்கை பஸ்ஸான், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் சார்பில் 360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை சான்றிதழ் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா