உள்ளூர் செய்திகள்

ரியாத்தில் மரணித்த முருகேஷின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்பேர் போரம்

ரியாத்தில் மரணித்த முருகேஷின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்பேர் போரம்ரியாத், அக். 25 —ராமநாதபுரம் மாவட்டம் கோதங்குளத்தைச் சேர்ந்த முருகேஷன் உடல் நலக்குறைவால் கடந்த 10 அக்டோபர் 2025 அன்று மரணம் அடைந்தார்.இந்த செய்தி ரியாத் மண்டல துணைச் செயலாளர் ஆர்.எஸ்.மங்களம் ரானி சைப்புல்லாஹ் மற்றும் மண்டலத் தலைவர் நூர் முஹம்மதுக்கு கிடைத்ததும், ரியாத் மண்டல சமூக நலத்துறைச் செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.அவர் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்று, இந்திய தூதரகத்தின் ஒருங்கிணைப்போடு மற்றும் சவுதி அரசாங்கத்தின் அனுமதியோடு, உடலை 24 அக்டோபர் 2025 அன்று மதுரைக்கான விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ. சீனி முஹம்மது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மதுரை விமான நிலையம் சென்று உடலைப் பெற்றுக் கொண்டனர். மாநில துணைச் செயலாளர் முகவை சலிமுல்லாஹ் கான் அவர்களின் ஏற்பாட்டில் வந்த தமுமுக அவசர ஊர்தியின் மூலம், உடல் சொந்த ஊரான கோதங்குளத்தில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகள், குறிப்பாக கொடிப்பள்ளம் சாதிக் பாஷா, மற்றும் மதுரை-முகவை மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆகியோருக்கு கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்தனர்.???? — ரியாத்தில் இருந்த ஆரிப் அப்துல் சலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !