உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை வை

விஞ்ஞானி மைக்கேல் பாரடேவிடம் படிக்காத ஒருவன் பணியாற்றினான். வெள்ளிப் பாத்திரத்தை அமிலத்திற்குள் தவறுதலாக போடவே, அது உடனே கரைந்தது. பயத்துடன் விஞ்ஞானியிடம் சொன்ன போது, ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யவில்லை. வேறொரு ராசாயன அமிலத்தை ஊற்றினார் பாரடே. கரைந்த வெள்ளித் துகள்கள் ஜாடியின் அடியில் தங்கியது. அதை வடிகட்டி எடுத்து பொற்கொல்லரிடம் கொடுத்தார். வெள்ளிப்பாத்திரம் மீண்டும் தயாரானது. இதைப் போல நம்பிக்கை வைத்தால் நல்வாழ்வு கிடைக்கும். ''நாங்கள் களிமண்; நீரே எம்மை உருவாக்குகிறீர்''.