மனபலமே முக்கியம்
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
காட்டில் திரிந்த மின்மினி பூச்சியை காகம் ஒன்று சாப்பிட முயன்றது. தப்பிக்க நினைத்த பூச்சி “நண்பா! சொல்வதை கேள்” என்றது. “என்னை உண்பதால் பசி அடங்காது. என்னை போல் நிறைய பூச்சிகள் இருக்குமிடத்தை காட்டுகிறேன்” என்றது. பேராசை பிடித்த காகத்தை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றது மின்மினிப்பூச்சி. அங்கு சிலர் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அதில் வந்த நெருப்பு பொறியை பார்த்து என்னை போல் எவ்வளவு மின்மினிப்பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன என சொன்னது. எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நெருப்பு பொறிகளை பிடித்து சாப்பிட ஆரம்பித்தது. பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். மீண்டும் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்தது மின்மினிப்பூச்சி. உடல் பலத்தை விட மனபலமே முக்கியம் என்கிறது பைபிள்.