நிழலின் அருமை
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
பெரியவர் ஒருவர் தன் குழந்தைகளிடம் அடுத்தாண்டு இருக்கமாட்டேன். என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என அடிக்கடி சொல்வார். சத்தான உணவு வேண்டும் என்பதற்காகவே இப்படி சொல்கிறார் என எண்ணி பெரியவரை நன்றாக கவனித்தனர். ஒரு நாள் இரவு அனைவரையும் அழைத்த அவர் நாளை சூரியன் உதிப்பதற்குள் என் இயக்கம் நின்றுவிடும் என்றார். எல்லோரும் வானத்தை பார்த்தார்கள். நிலா மேகத்தில் ஊடுருவி சென்று கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் மின்னின. அனைவரும் உறங்கச் சென்றனர். சூரியன் உதிக்கத் தொடங்கியது. அவரின் அறைக்கு சென்ற போது அவர் உயிருடன் இல்லை. வாழ்க்கை பாதையை காண்பித்தவர் அருகில் இல்லை என நினைத்து குழந்தைகள் வருந்தினர். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.