உள்ளூர் செய்திகள்

வேண்டும் பெருந்தன்மை

வேட்டைக்கு சென்ற மன்னர் ஒருவர் விலங்கு என கருதி, சிறுவன் மீது அம்பு விட அவன் இறந்தான். விசாரணையில் ஒரு விவசாயியின் மகன் எனத் தெரிந்ததும் அவர் வீட்டுக்குச் சென்றார் மன்னர். ஒரு தட்டு நிறைய பொற்காசுகள், மற்றொன்றில் வாள் ஒன்றையும் வைத்து கண்ணீர் மல்க நடந்ததைக் கூறினார். மவுனமாக இருந்த விவசாயி, ''எனக்கு எதுவும் வேண்டாம். நல்லவராக இருப்பதால் நடந்ததை மறைக்காமல் கூறினீர்கள். உங்களை கொன்று ஒரு நல்லவரையும், இந்த நாட்டு மன்னரையும் இழக்க விரும்பவில்லை. என் மகன் வாங்கி வந்த வரம் அப்படி'' என்றார் விவசாயி. இந்த பதிலை எதிர்பார்க்காத மன்னர் அவரை கட்டித்தழுவினார். தவறுக்கான சூழலை ஆராயுங்கள். தெரியாமல் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோருங்கள். மகிழ்ச்சியான பாதை நோக்கி செல்லுங்கள்.