காத்திருந்து...
UPDATED : மார் 31, 2024 | ADDED : மார் 31, 2024
பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஒரு கர்ப்பிணி இரண்டு கையிலும் பையுடன் நின்றிருந்தாள். அப்போது ஒரு பஸ் வரவே, வேகமாக ஓடி வந்த பெண் கர்ப்பிணியின் பையை தட்டிவிட்டு அதில் ஏறினாள். அவளும் கீழே விழுந்த பொருட்களை எடுக்க சிரமப்பட்டாள். அப்போது அந்த பஸ்சின் ஓட்டுனர் கண்ணாடி வழியே அவள் சிரமப்படுவதை பார்த்தார். சிறிது துாரம் நகர்ந்த பஸ்சை பின்னோக்கி அவள் நிற்கும் இடத்திற்கு கொண்டு வந்தார். பிறகு கீழே விழுந்த பொருட்களை அவளுக்கு எடுத்துக் கொடுத்தார். அந்தப் பெண் உட்பட இச்செயலை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அமைதியாயினர். சிறு உதவி என்றாலும் அது பிறருக்கு திருப்தியாக இருக்க வேண்டும்.