உள்ளூர் செய்திகள்

மாமியாரின் மந்திரம்

புதுமணத் தம்பதிகளான ஆப்ரகாம், டெய்சிக்கு அடிக்கடி சண்டை வந்தது. 'மனதில் பக்குவம், செலவில் சிக்கனம் இல்லாவிட்டால் வாழ்வு சிறக்காது' என கணவர் ஆப்ரகாம் அடிக்கடி சொல்வது தான் இதற்கு காரணம். ஒருநாள் ஆப்ரகாம் வெளியூர் சென்றதால் மருமகளுக்கு துணைக்கு வந்தார் மாமியார். அவரிடம் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டாள் டெய்சி. 'வாழ்வு என்பது ஒரு வரம். அதை காப்பது உன் கடமை. தினமும் அதிகாலையில் எழு. வீடு மட்டுமின்றி மனதை சுத்தமாக வை, சமையலில் ஆர்வம் காட்டு. அருகில் இருந்து உணவு பரிமாறு. வீண்செலவை தவிர்த்திடு. இப்போது கூட பார்... வீட்டிலுள்ள எல்லா லைட்டுகளையும் எரிய விட்டுள்ளாய். தேவையானவை எரிந்தால் போதாதா...'' எனக் கேட்டாள் மாமியார். மின்னல் போல புத்திக்கு உறைக்க, தன்னை திருத்திக் கொள்ள முடிவு செய்தாள் டெய்சி.