உள்ளூர் செய்திகள்

வேண்டாமே அன்பு

நீண்ட காலம் கழித்து அரண்மனையில் குழந்தையின் சப்தம் கேட்டது. அரண்மனை பணியாளர்கள் மகிழ்ந்தனர். அவர்களுக்கு புத்தாடை அளித்தார் மன்னர். துள்ளிக் குதித்து வீட்டுக்கு வந்தான் பணியாளரில் ஒருவரான சகாயம். வழியில் கண்ட நண்பர்களிடம், 'இளவரசர் பிறந்ததால் இரண்டு வேட்டி, துண்டு கொடுத்தார் மன்னர்' என்றான். ' உன்னிடம் ஒரு வேட்டி, துண்டு தானே இருக்கிறது. இரண்டு என்கிறாயே?'' என நண்பர்கள் கேட்க அதற்கு அவன், 'என் பக்கத்து வீட்டு எதிரியான பீட்டருக்கு கிடைத்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். நல்ல வேளை அவனுக்கு கிடைக்கவில்லை' என சந்தோஷப்பட்டான். ''இப்படித்தான் அண்டை வீட்டார் மீது பலர் 'அன்பு' காட்டுகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல'' என சகாயத்தை எச்சரித்தான் அந்த கூட்டத்தில் இருந்த நண்பன் ஒருவன்.