பூனையால் புரிந்தது
UPDATED : மே 17, 2024 | ADDED : மே 17, 2024
பெரியவர் ஒருவரிடம், 'துன்பத்தில் இருந்து மீள வழிகாட்டுங்கள்' எனக் கேட்டார் ஜான். 'வாழ்வைப் புரிந்து கொண்டால் துன்பம் உன்னை பாதிக்காது' என்றார். இதை விளக்க கதை ஒன்றையும் சொன்னார். 'இளைஞன் ஒருவன் பூனை வளர்த்தான். அது எலியை கவ்வியபடி வந்ததும் மகிழ்ந்தான். ஏனென்றால் அவனது வீட்டில் எலித்தொல்லை அதிகம். மறுநாள் அந்த பூனை, ஆசையோடு அவன் வளர்த்த கிளியைக் கவ்வியது. அதைப் பார்த்ததும் துன்பப்பட்டான். மூன்றாம் நாள் எங்கிருந்தோ பறந்து வந்த சிட்டுக்குருவியை பிடித்தது. இதைப் பார்த்ததும் தனக்கு தேவையான உணவை பிடிப்பது பூனையின் இயல்பு என்பது புரிந்தது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை என்றார் பெரியவர்.