முடியை நிமிர்த்த முடியுமா...
UPDATED : ஜூலை 04, 2024 | ADDED : ஜூலை 04, 2024
அறிவாளி ஒருவர் தன் மகளுடன் வாழ்ந்து வந்தார். அவளின் அழகில் மயங்கிய முட்டாள் ஒருவன், 'உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்' எனக் கேட்டான். அவனது தோற்றத்தைப் பார்த்த அவர், 'இவன் முட்டாளாகத்தான் இருப்பான்' என முடிவு செய்தார். தன் மகளின் சுருண்ட தலைமுடி ஒன்றை கொடுத்து, 'இதை நேராக்கி தந்தால் உனக்கே திருமணம் செய்து வைக்கிறேன்' என சொன்னார். தலைமுடியை நேராக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். அந்த முட்டாளுக்கு தெரியாதே...