சிங்கத்தின் வேதனை
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
வயதான சிங்கம் ஒன்று வேட்டையாட முடியவில்லையே என வேதனைப்பட்டது. இதையறிந்த முயல் ஒன்று, ''சிங்கராஜாவே! கவலை இல்லாதவர் என யாரும் இல்லை. அங்கே வரும் யானையை பாருங்கள். பலசாலியான அதற்கும் கவலை இருக்கும்' என்றது. யானை அருகில் வந்ததும், 'உனக்கு ஏதும் கவலை இருக்கிறதா' என சிங்கம் கேட்டது. 'சிறுபூச்சிகள் கூட என் காதிற்குள் நுழைந்து தொல்லைப்படுத்துகிறதே...அதனால் காதை ஆட்டியபடி இருக்கிறேன்'' என கவலைப்பட்டது யானை. இதைக் கேட்ட சிங்கம் ஆறுதல் கொண்டது. அனைவருக்கும் பொதுவானது கவலை. 'பாரத்தை என் மீது சுமத்திவிட்டு நிம்மதியாக உறங்குங்கள்' என்கிறது பைபிள்.