நிம்மதியாக இரு
UPDATED : ஜூலை 18, 2024 | ADDED : ஜூலை 18, 2024
பாதிரியார் பிலிப்ஸ் பஸ்சில் சென்ற போது பிட் பாக்கெட் அடித்தான் ஒருவன். இதை கேள்விப்பட்டு அவரது நண்பர்கள் காண வந்தனர். 'என் பணம் திருடு போனது உண்மை தான். அவன் கண்ணியமானவன். என்னைத் துன்புறுத்தாமல் நைசாக திருடினான். ஆனால் வீட்டிலுள்ள பணம், பேங்கில் உள்ள பணம் திருடப்படவில்லை. ஆகையால் அந்த இளைஞனுக்கு நன்றி' என்று சிரித்தார் பிலிப்ஸ். 'இழந்ததை எண்ணிக் கவலைப்படுவதை விட, இருப்பதை கொண்டு நிம்மதியாக இரு.