உள்ளூர் செய்திகள்

வட்டத்துக்குள் சிக்காதே

பந்தை எறிந்தால் அதைக் கவ்விக் கொண்டு வருவதற்கு நாயை சிலர் பழக்கியிருப்பர். இப்படி எறிவதும் தருவதுமாக செயல் தொடர்ந்து நடந்தால் முடிவு என்னாகும்... இதைப் போலத்தான் ஒரே மாதிரியான செயல்களை தினமும் செய்தால் வாழ்க்கை தேங்கிய குட்டையாகி விடும். நாள் வாரமாகி, மாதமாகி, வருடமாகி ஆயுளே முடிந்து விடும். இப்படி வட்டத்துக்குள் சிக்கிய வாழ்க்கை பயனற்றது. வலைக்குள் சிக்கிய பூச்சியாக வாழும் மனிதனால் பயனில்லை. உண்பதும், உறங்குவதும் மட்டுமல்ல... வாழ்க்கை பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.