மூன்று தகுதிகள்
UPDATED : மார் 14, 2025 | ADDED : மார் 14, 2025
இயேசுவை தரிசிக்க மூன்று ஞானிகள் வந்தனர். அவர்கள் * பாரசீகத்தை சேர்ந்த மெல்கியோர் * எத்தியோப்பியாவை சேர்ந்த கஸ்பர்* அரேபியாவை சேர்ந்த பல்தாசார். ஆண்டவரின் அருளை பெற மூன்று தகுதிகள் வேண்டும் என்பதன் அடையாளமாகவே மூன்று ஞானியர் வந்ததாகச் சொல்வர். தகுதிகள் என்ன தெரியுமா... எண்ணம், சொல், செயலால் மனிதன் துாய்மையாக வாழ வேண்டும்.