உள்ளூர் செய்திகள்

குறையும் நிறையும்

எப்போதும் சிலர் மற்றவரை குறை கூறிக் கொண்டே இருப்பர். இதனால் குறை கூறுபவருக்கு என்ன பயன்? என அவர்கள் யோசிப்பதில்லை. முன்பு இத்தாலியை ஆட்சி செய்தவர் மார்க்கஸ் ஓரியாலிஸ். இவர் 'மெடிடேஷன்' என்னும் புத்தகத்தை எழுதினார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் தன்னை பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறார். பிறரை பற்றி சிந்திக்காததால் மனம் நிறைவாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். பார்த்தீர்களா... இவரைப் போல் பின்பற்றினால் டென்ஷன், படபடப்பு வராது. ஒருவரை குறை கூறுவதால் அவர்கள் மாறப் போகிறார்களா? இல்லை. அல்லது திருந்தத்தான் போகிறார்களா... இல்லை தானே. உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். எல்லோரையும் சரி செய்வது நமது வேலையல்ல...நமக்கான செயலை நிறைவாக செய்வதன் மூலம் குறைகள் தவிர்க்கப்படும்.