உன்னை பற்றி யோசி
UPDATED : ஏப் 03, 2025 | ADDED : ஏப் 03, 2025
ஊருக்குள் வசித்த சில நாய்கள் காட்டிற்குள் சென்றன. அங்கே ஒரு சிங்கத்தின் தோல் தரையில் இருப்பதைக் கண்டன. அந்த தோலைக் கிழித்து எறிந்து மகிழ்ந்தன. இதை புதரில் இருந்து பார்த்த கிழட்டு நரி ஒன்று, சிங்கம், 'இப்போது இருந்தால் இவர்கள் இப்படி கொட்டம் அடிப்பார்களா...' என முணுமுணுத்தது. ஆத்திரம் அடைந்த நாய்கள் சண்டைக்கு வர, புதருக்குள் ஓடி மறைந்தது நரி. 'மற்றவர் விஷயத்தில் தலையிடாதே; உன்னை பற்றி யோசி' என்கிறார் ஆண்டவர்.