உள்ளூர் செய்திகள்

உங்களுக்கு அருகில்...

நேர்மை என்பதே நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காரணம் உண்மையைப் பேசினால் பலன் கிடைக்காது என்ற எண்ணம் பலருக்கு வந்து விட்டது. ஆனால் உண்மையை பின்பற்றினால் அது நம்மை உயர வைக்கும். உதாரணமாக... சரியான நேரத்திற்கு பணிக்கு செல்வது, அக்கறையுடன் பணியாற்றுவது, குடும்ப கடமைகளை தட்டிக் கழிக்காமல் செய்வது, நல்ல மனிதனாக வாழ்வது... என சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி உங்களுக்கு நீங்களே உண்மையாக வாழுங்கள். உங்களுக்கு அருகில் ஆண்டவர் இருப்பதை உணர்வீர்கள்.