பேசும்முன் யோசி
UPDATED : மே 15, 2025 | ADDED : மே 15, 2025
எதிர்மறையாக சிந்திப்பவர்கள், நேர்மறையாக சிந்திப்பவர்கள் என இருவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பளிச்சென நம் நினைவுக்கு வருவது பாசிட்டிவ் மனிதர்கள் மட்டுமே. 'இல்லை... அது என்னன்னா...' என 'இல்லை' என்றே சிலர் எப்போதும் பேச தொடங்குவர். சிலர் 'ஆமா... அது உண்மைதான்' என 'ஆமாம்' என பேசத் தொடங்குவர். 'ஆமாம்', 'இல்லை' என்ற சொற்கள் பாசிட்டிவ், நெகட்டிவ் எண்ணத்தின் வெளிப்பாடே. மனநிலையை தீர்மானிப்பது நம் எண்ண ஓட்டமே! நேர்மறை எண்ணம் எதையும் சாதிக்கும். எதிர்மறை எண்ணம் நம் ஆற்றலைப் பாதியாக்கி விடும். 'மனோபாவம் என்பது சின்ன விஷயம்தான்; ஆனால் அது பெரிய மாற்றத்தை உருவாக்கி விடும்' என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். இனியாவது பேசும் முன் யோசிப்பீர்களா...