உள்ளூர் செய்திகள்

வரவும் செலவும்

பின்வரும் கற்பனையை சிந்தித்தால் உங்களுக்கு ஒரு உண்மை புரியும். வாடிக்கையாளர் ஒருவரிடம், '' உங்கள் கணக்கில் தினமும் ஒரு தொகை வரவு வைக்கப்படும். விதிமுறைக்கு ஏற்ப அதை செலவழிக்கலாம்'' என்றார் வங்கியின் மேலாளர். * வரவு வைக்கும் பணத்தை அன்றாடம் செலவழிக்காவிட்டால் அது பற்று வைக்கப்படும். * வேறொருவர் கணக்கிற்கும் உங்கள் பணத்தை மாற்ற முடியாது. * முன் அறிவிப்பு இன்றி எப்போது வேண்டுமானாலும் கணக்கு ரத்து செய்யப்படும். இந்த அடிப்படையில் தான் 'காலம்' என்ற சக்தி இயக்குகிறது. மனிதனின் கணக்கில் தினமும் 24 மணி நேரம் வரவாகிறது. அதை நல்ல செயலுக்கு பயன்படுத்தாவிட்டால் உங்கள் வாழ்க்கை வீணாகும்.