அப்படின்னா...
UPDATED : ஜூன் 20, 2025 | ADDED : ஜூன் 20, 2025
குழந்தைகளிடம் திண்ணையை பார்த்திருக்கிறாயா எனக் கேட்டால், 'அப்படின்னா...' என புரியாமல் விழிப்பார்கள். முன்பு வீடுகளின் முன்புறம் பொது நலனுக்காக திண்ணை கட்டப்பட்டது. வீட்டிலுள்ள பெரியவர்கள் அதில் அமர்ந்து ஓய்வு எடுப்பர். வழிப்போக்கர்கள் இளைப்பாறவும், குழந்தைகளுக்கு பாடம் நடத்தவும் (திண்ணைப் பள்ளி) விசேஷ நிகழ்ச்சி நடத்தவும் அக்காலத்தில் பயன்பட்டது. தற்காலத்தில் திண்ணை காணாமல் போனது. அந்த இடம் எல்லாம் கடைகளாக மாறி வாடகைக்கு விடப்படுகிறது. பொதுநலத்தின் அடையாளமான திண்ணை சுயநலத்தால் மறைந்தே விட்டது. சொந்த நலனை தேடாதே; மற்றவர் நலனில் அக்கறை கொள்.