ஏற்றப்பாட்டு
UPDATED : ஜூலை 03, 2025 | ADDED : ஜூலை 03, 2025
நிலத்தில் பாடுபடும் விவசாயிகள் மனச்சோர்வை மறக்க பாடிக் கொண்டே பணியாற்றுவர். நாற்று நடும் போதும், களை பறிக்கும் போதும் பெண்கள் பாடுவர். கிணற்றில் இருந்து நீர் இறைத்து வயலுக்கு பாய்ச்சும் போது பாடுவது 'ஏற்றப்பாட்டு'. இதன் பெருமையை 'ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை' என்பார்கள். 'மூங்கில் இலை மேலே துாங்கும் பனிநீரே... துாங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே' என்னும் ஏற்றப்பாட்டு பிரபலமானது. ஒரு விவசாயியின் மனநிலையோடு இயேசுவின் பெருமைகளை ஏற்றப் பாடலில் பாடியவர் முன்சீப் வேதநாயகம்.