உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பாழுங்கிணற்றுக்குள் விழுந்தது டேனியல் வளர்த்த கழுதை. அதில் தண்ணீர் இல்லாததால் லேசான காயத்துடன் பிழைத்துக் கொண்டது. அதன் உடம்பு, கால்களை கட்டி வெளியே துாக்க முடியவில்லை. கழுதை உதைக்கும் என்பதால் யாரும் அதை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. அது படும் கஷ்டத்தை பார்த்த டேனியலுக்கு மனம் வலித்தது. உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என நண்பர்களுடன் சேர்ந்து மண்ணைக் கொட்ட ஆரம்பித்தான். என்ன ஆச்சரியம், மண்ணை உதறி உதறி அதன் மேல் ஏறி மேட்டிற்கு வந்தது. இந்த கழுதைக்கு எப்படி மேட்டிற்கு சென்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்ததோ அதை போல நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வேண்டும்.