உள்ளூர் செய்திகள்

தாயாக மாறியவர்

லாரன்ஸ் என்னும் ஆராய்ச்சியாளர் பறவைகள் பேசும் மொழியைத் தெரிந்தவர். வாத்து பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், ஒருமுறை வாத்து முட்டைகளை இயந்திரத்தில் வைத்து குஞ்சு பொறித்தார். அந்த குஞ்சுகளை வளர்த்த போது, தாய் வாத்தைப் போல தன் உடலைத் தாழ்த்திக் கொண்டு குரலும் எழுப்புவார். குஞ்சுகளும் அவரை பின்தொடரும். ஆராய்ச்சியாளர் என்ற நிலையை மறந்து தாய் வாத்தாகவே மாறுவது அன்பின் உச்சம் தானே...