உள்ளூர் செய்திகள்

மதிப்பு மிக்கது எது

மன்னர் சார்லஸ் வேட்டைக்குச் சென்ற போது வழி தவறி காட்டுக்குள் சென்றார். பசியால் வாடிய அவரது கண்ணில் குடிசை ஒன்று தென்பட்டது. மூதாட்டி ஒருவர் அங்கு சூப் தயாரித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டதும், 'எனக்காகத் தானே சூப் தயாரிக்கிறாய்' எனக் கேட்டார் மன்னர். ' உன்னை விட மதிப்பு மிக்கது இந்த சூப்' என்றாள் மூதாட்டி. 'ஏன்' என அதிர்ச்சியுடன் கேட்டார் மன்னர். 'எந்த நேரத்தில் எது தேவையோ அதற்கே மதிப்பு அதிகம். பசியால் வாடும் போது புத்துணர்ச்சி தரும் இந்த சூப்பை விட மதிப்பு மிக்கது வேறில்லை'' என்றாள். அதைக் கேட்டு அமைதியானார் மன்னர்.